தெஹ்ரான், 

ரானில் அதிபருக்கு எதிரான போராட்டம் வன்முறையானது. இதில் இதுவரை 13 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

நாட்டில் விலைவாசி உயர்வு, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மக்கள் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஈரானின்   வடகிழக்கு நகரமான மஷாத் நகரத்தில் தான் கடந்த வாரம் மக்களின் போராட்டம்  தொடங்கியது.

இதையடுத்து அதிபர் ரவுகான் மக்களுக்கு அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த மக்கள் பல்வேறு நகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் போராட்டம் போகப்போக வன்முறைப் போராட்டமானது. அதையடுத்து, அரசு போராட்டக்காரர்களை ஒடுக்க  தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 13 பேர் இதுவரை பலியானதாக தகவல்கள் வந்துள்ளன.

ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஈரான் மக்கள் சுதந்திர வேட்கையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்