தெஹரான்:

தலையில் முக்காடு அணியாமல் போராட்டம் நடத்திய 29 பெண்கள் ஈரானில் கைது செய்யப்பட்டனர்.

ஈரானில் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துதான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல ஆண்டு காலமாக பெண்கள் போராடி வருகின்றனர்.

சமீபத்தில் முக்காடை அவிழ்த்து அதை குச்சியின் கொடி போல் கட்டி பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். சமூக வலை தளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஈரான் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கு எதிராக உள்ளனர் என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதை எதிர்த்து இன்று முக்காடு அணியாமல் போராடிய 29 பெண்களை தெஹரான் போலீசார் கைது செய்திருப்பதாக அங்குள்ள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டதை உறுதி செய்ய முடியவில்லை என்றாலும் போராட்டம் தெஹரானில் இருந்து பழமை வாய்ந்த நகரங்களான எஸ்பகான், சிராஸ் ஆகிய பகுதிகளுக்கும் பரவியுள்ளது.