ஸ்ரீநகர்:

சியுடன் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தையை கண்ட சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது உணவினை அந்த சிறுவனக்கு ஊட்டி விட்டு மகிழ்ச்சி அடைந்தார். இது நிகழ்வு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவின்,  49பிஎன் பிரிவை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் இக்பால் சிங். சம்பவத்தன்று அவர் ஸ்ரீநகரில் நவாக்கடலில் பணியாற்றினார்.  அப்போது சாப்பிடும் தருணத்தின் போது அருகே ஒரு சிறுவன்  அமர்ந்திருந்ததை கண்டார்.  அந்த சிறுவன் ஊனமுற்ற நிலையில்  பசியுடன் இருந்தது தெரிய வந்தது.   இதையடுத்து அந்த சிறுவனுக்கு தான் கொண்டு வந்த உணவினை தனது கையாலேயே ஊட்டிவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர்தான் தெரிந்தது, அந்த சிறுவன் கடந்த  2018 ம் பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் சிக்கி,  கிட்டத்தட்ட தனது வாழ்வை இழந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பெரும் சோகத்துக்கு ஆளானார் இக்பால்சிங்.

இதுகுறித்து தெரிவித்த இக்பால்சிங், சம்பவம் நடைபெற்றபோது தான் அந்த கான்வாயில் இருந்த தாகவும், பள்ளத்தாக்கு பதியில் ஜவான்கள் மீது கல்லெறி தாக்குதல்கள் நடைபெற்றது. அப்போது காயமடைந்த ஜவான்களை மீட்க எனது வாகனத்தை பயன்படுத்தினேன் என்றும்,  பின்னர் இறந்தவர்கள் குறித்து அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள்  கல்லைத்தூக்கி எரிந்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இக்பால்சிங்கின் தற்போதைய செயலுக்கு சமூக ஊடகங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. உயர்அதிகாரிகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

காஷ்மீரில் வாழ்ந்து வரும் மக்கள் ஒருபக்கம் பயங்கரவாதிகளிடமும், மற்றொரு புறம் ராணுவத்தினரிடமும் சிக்கி சின்னாப்பின்னாமாகி வருவது அனைவரும் அறிந்ததே.  அதன் தாக்ககம் இன்று பலர் ஊனமுற்றவர்களாகவும், பசியால் வாடுவதையும் இந்த வீடியோ எடுத்து கூறுவது நெகிழ்ச்சியான விஷயமே… இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் பல விஷயங்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

அந்த நெகிழ்ச்சியான வீடியோ… இதோ உங்களுக்காக….