ஐ.பி.எல். 2023-27 தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி டி.வி. நிறுவனமும் டிஜிட்டல் ஒளிபரப்பை கைப்பற்ற டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் வியாகாம் 18 நிறுவனத்துக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2023 முதல் 2027 ம் ஆண்டுவரயிலான ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நேற்று முடிவடைந்தது.
இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை ரூ. 39,035 கோடிக்கு விற்பனையானதாகக் கூறப்படுகிறது.
ஆண்டொன்றுக்கு 74 போட்டிகளை கொண்ட ஒரு சீசனில், போட்டி ஒன்றுக்கு தொலைக்காட்சி உரிமை ரூ. 57.5 கோடிக்கும் டிஜிட்டல் உரிமை ரூ. 48 கோடிக்கும் ஏலம் போனது.
இந்திய துணை கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு மொத்தத்தில் ரூ. 21,275 கோடிக்கு ஏலம் போயுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்புக்கு ரூ. 17,760 கோடி ஏலம் போயுள்ளது. இரண்டும் சேர்த்து ஐந்தாண்டுக்கு ரூ. 39,035 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
கடந்த முறை 2017 – 2022 க்கான ஏலத்தை ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் நிறுவனம் ஏலத்தில் எடுத்த நிலையில் இந்த முறை சுமார் 139 சதவீதம் அதிகமாக ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.