ஐ.பி.எல். விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், மகாராஸ்திரத்தில் போட்டிகள் நடத்தப் படுமா ?என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
மழைப் பொய்த்ததால் மராட்டியம் வறட்சியில் வாடுகின்றது. இந்தியாவில் அதிகப்பட்சமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் மகாராஸ்திரா முதல் இடத்தில் உள்ளது. பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தும் எந்த மாற்றமும் விவசாயிகள் வாழ்வில் ஏற்படவில்லை.
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதால், சமீபத்தில் ஹோலிப்பண்டிகையின் போது கூட, தண்ணீரைத் தவிர்த்து ஹோலி கொண்டாடுங்கள் என முதல்வர் ஃபட்னாவிஸ் கேட்டுகொண்டது நிகழ்ந்தது.
இந்நிலையில், ஐ. பி. எல். போட்டிகளுக்கு மைதானத்தை தயார் படுத்த அதிக அளவில் தண்ணீர் , (அதாவது ஒரு நாளைக்கு அறுபது லட்சம் லிட்டர் )வீணாகப் பயன்படுத்தப் படுவதை தடுக்கக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது.
பி.சி.சி.ஐ-யின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்த நீதிபதிகள், போட்டிகளை தண்ணீர் பஞ்சம் மில்லாத மாநிலத்திற்கு ஏன் மாற்றக் கூடாது ? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பயன்படுத்தப் படும் தண்ணீர் குடிக்க முடியாத தண்ணீர் என எதிர்தரப்பு வாதாடினாலும், அந்தத் தண்ணீர் கூட கிடைக்காது ஏங்கும் கிராமங்கள் மகாராஸ்திரா முழுவதும் உள்ளன எனத் தெரிவித்ததை நீதிபதிகள் ஆமோதித்தனர்.
வியாழக்கிழமையன்று தண்ணிர் வீணாவதைத் தடுக்க அரசு என்ன சிறப்பு ஏற்பாடு வைத்துள்ளது என பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐ.பி.எல். போட்டிகள் மும்பையை விட்டு மாற்றப்பட வேண்டும் என்பது சரியானக் கோரிக்கையா ? உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள் கீழே !