ஹைதராபாத்,

ந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர்  (ஐபிஎல்)  நாளை தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நகரில் மட்டுமே ஐபிஎல் தொடக்க விழா நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு 8 மாநிலங்களில் ஐபிஎல் தொடக்க விழா கோலாகலம் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் நாளை தொடங்குகிறது. . இந்த கிரிக்கெட் திருவிழா மே 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டம் மே 21ந்தேதி நடைபெறும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிய்ல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை வென்றது. அதன் காரணமாக இந்த ஆண்டு போட்டி தொடக்க விழா ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில்  தற்போதைய சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை  ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதேபோல் இறுதிப் போட்டியும் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது.

எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கவிழா  8 நகரங்களில் நடத்தப்படு கின்றன.

நாளை ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து  ‘புனே நகரில் 6ந் தேதியும், ராஜ்கோட்டில் 7ந்தேதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8ந் தேதியிலும், மும்பையில் 9ந் தேதியும், கொல்கத்தாவில் 13ந்தேதியும், டெல்லியில் 15ந் தேதியும் தொடக்க விழாக்கள் நடைபெற உள்ளன.

ஐபிஎல் தொடக்க விழா மற்ற மாநிலங்களிலும் நடைபெறுவதால், அப்பகுதியில் உள்ள சினிமா பிரபலங்கள் பங்கேற்க எளிதாக இருக்கும் என்றும், உள் மாநில கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்ற வியாபார நோக்கில் தனித்தனியாக  8 மாநில  மைதானங்களில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு போட்டியின் தொடக்கவிழா  நிகழ்ச்சிகளில் நடிகைகள் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப், அலியா பட், பிரனீத் சோப்ரா, தீபிகா படுகோன், ஸ்ரதா கபூர், நடிகர் ஷாருக்கான், சல்மான் கான் டைகர் ஷெராப் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், தவிர, 200 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்  1990 களில் இந்திய அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்ந்தவர்கள் சச்சின், சேவக், டிராவிட், கங்குலி மற்றும் லட்சுமண். சீனியர் வீரர்களான இவர்களுக்கு, நாளை ஐதரா பாத்தில் நடக்கும் துவக்க விழாவின் போது, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இந்தஆண்டு ஐபிஎல் டி20 தொடரில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

47 நாட்கள் நடக்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரு முறை மோதும். 56 லீக் போட்டிகள், 3 பிளே ஆப், பைனல் என, மொத்தம் 60 போட்டிகள் நடக்கவுள்ளன.

சென்னை, ராஜஸ்தான் அணிகள் தடை காரணமாக இந்த ஆண்டும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.