அபுதாபி: 
தராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் அணியும் வெற்றி பெற்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி, அதிரடியாக ஆடி 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இந்த அணியில் இசான் கிஷான், 32 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோல் சூர்யகுமார் யாதவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.
ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தினார். ரஷித் கான், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ  அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டலஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிருத்வி ஷா 48 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவான் 43 ரன்களும், ஹெட்மயர் 29 ரன்களும் சேர்த்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ தரப்பில் சிராஜ் 2 விக்கெட்டும், சாகல், ஹர்ஷல் படேல், டான் கிறிஸ்டியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் விராட் கோலி 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய ஸ்ரீகர் பரத் பொறுப்புடன் ஆடினார். டி வில்லியர்ஸ் 26 ரன்னில் அவுட்டானார்.  அடுத்து இறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ஸ்ரீகர் பரத்துடன் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
ஐபிஎல் தொடரில் நாளை துபாயில் நடக்க உள்ள முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30  மணிக்குத் தொடங்க உள்ளது.
இதையடுத்து, பெங்களூர் அணி எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 11ம் தேதி எதிர்கொள்கிறது.