பெங்களூரு: ஐபிஎல் திருவிழா பெங்களுருவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது.
இன்றைய (மார்ச் 28) முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு – சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 31- ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2026-ல் கலந்துக்கொள்ளும் 10 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
பெங்களுரு அணி
ஆர்.சி.பி அணியில் விராட் கோலி, டிம் டேவிட், பில் சால்ட், ஜேக்கப் பெத்தே, ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்ட காத்திருக்கிறார்கள். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டப்பி, குருணல் பாண்ட்யா, ஷெப்பர்டு ஆகியோர் உள்ளனர்.
ஐதராபாத் அணி
ஐதராபாத் அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் பதிலாக இஷான் கிஷன் அணியை வழிநடத்த உள்ளார். அந்த அணியில் இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், லிவிங்ஸ்டன், நிதிஷ்குமார் ரெட்டி என கடப்பாரை பேட்டிங் லைன் அப் உள்ளது. பெளலிங்கில் மிரட்ட ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல்,பிரைடன் கார்ஸ் மற்றும் இஷான் மலிங்கா ஆகியோரும் உள்ளனர்.
முந்தைய 18 சீசன்களில் பெருவாரியான கோப்பைகளை வென்றிருக்கும் மும்பை இண்டியன்ஸ் (5), சென்னை சூப்பா் கிங்ஸ் (5), கொல்கத்தா நைட் ரைடா்ஸ் (3) அணிகளுக்கு, கடந்த சீசன் அவ்வளவாக சோபிக்கவில்லை. எனவே தங்களின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியுடன் அவை களம் காண்கின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் RCB அணி 11 ஆட்டங்களிலும், SRH 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும். போட்டிகள் சரியாக இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது. பெங்களூரு அணி 18 ஆண்டுகள் காத்திருப் புக்கு பின் கடந்தாண்டு கோப்பையை கைப்பற்றியது. பெங்களுரு அணிக்கு இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பெங்களூருவில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
பெங்களூரு போக்குவரத்து ஆலோசனையின்படி, மைதானத்தைச் சுற்றியுள்ள பல முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தம் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. குயின்ஸ் சாலை, எம்ஜி சாலை, கப்பன் சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை, மியூசியம் சாலை, கஸ்தூரிபா சாலை, லாவெல் சாலை, விட்டல் மால்யா சாலை மற்றும் கப்பன் பூங்காவிற்குள் இருக்கும் பகுதிகள் உட்பட பல முக்கிய சாலைகளில் பார்க்கிங் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]மார்ச் 28ந்தேதி பெங்களூருவில் தொடங்குகிறது 19வது ஐபிஎல் திருவிழா… போட்டிகள் விவரம்…