ஐதராபாத்:

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது,

சென்னை அணி வீரர் ராயுடு, ஸ்டான்லேக் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அரை சதம் எட்டினார். இவர் 79 ரன்களில் ரன்- அவுட் ஆ£னார். தொடர்ந்து ரெய்னா அரை சதம் கடந்தார். சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. ரெய்னா 53 ரன், கேப்டன் தோனி 25 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இப்போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் பெங்களூரு அணி வீரர் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி ரெய்னா மீண்டும் முதலிடம் பிடித்தார். இதைதொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்களை மட்டுமே ஐதராபாத் அணி எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்துடன் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.