பெங்களூரு:
ஐபில் 11வது சீசனுக்கு வீரர்கள் ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் வெறும் 2 கோடிக்கே ஏலம் போனார். அவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.
இதுவரை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த யுவராஜை, சன் அணியினர் புறக்கணித்ததால் பஞ்சாப் அவரை சொற்ப பணத்திற்கு தனதாக்கி உள்ளது.
மேலும், டுபிளசியை சிஎஸ்கே 1.60 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது. ஏற்கனவே பிரோவா, ஹர்பஜனை ஏலம் எடுத்த நிலையில் தற்போது டுபிளசியையும் தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர், இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டாக்சை 12.5 கோடி ரூபாய்க்கும், ரஹானேவை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர், வங்கதேச வீரர் ஷாகிப்பை 2 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தததுள்ளது.
கோல்கட்டா அணி மிட்செல் ஸ்டார்க்கை 9.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
ஆஸி., வீரர் மேக்ஸ்வெல்லை 9 கோடி ரூபாய்க்கும், காம்பீரை 2.80 கோடி ரூபாய்க்கும் டில்லி அணி ஏலம் எடுத்துள்ளது.