நியுஜிலாந்து

டந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தின் போது ஆட்டக்காரர்கள் ஆடுமாடுகளைப் போல் நடத்தப்பட்டதக நியுஜிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர்.    பலரை வாங்க அணிகளுக்குள் கடும் போட்டி நிலவியது.   இதில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.12.5 கோடிக்கும்,  அடுத்ததாக ஜெய்தேவ் உனத்கட் 11.5 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.

இந்த ஏல நடைமுறைக்கு நியுஜிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   சங்கத்தின் தலைவர் ஹீத் மில்ஸ், “இந்த ஏலமுறை ஆட்டக்காரர்களை மிகவும் கொடுமைப் படுத்துவதாக உள்ளது.   அவர்கள் ஆடு மாடுகளைப் போல் ஏலம் வாங்குபவர்கள் முன்பு நடத்தி அழைத்து வரப்பட்டனர்.    அதே நேரத்தில் இந்த ஐபில் மூலம் கிரிக்கெட் வளர்ச்சி பெறும் என்பதும் ஆட்டக்காரர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்குமென்பதில் ஐயமில்லை. ” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து ஐபில் இன் தலைமை அதிகாரி ஹேமங்க் அமின், “பல புதிய ஆட்டக்காரர்கள் தற்போது இந்த ஏலத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர்.   அவர்களைப் பற்றி ஏலம் எடுப்பவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு அணிவகுப்பு நடத்தப்பட்டது.   இதில் வேறேதும் நடக்கவில்லை.   நாங்கள் ஆட்டகாரர்களை மிகவும் மதிக்கிறோம்.    ஏலத்துக்கு ஒரு சுவாரசியம் தேவை என்பதும் இந்த அணிவகுப்புக்கு ஒரு காரணம்”  என தெரிவித்துள்ளார்.