கொச்சி: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் இன்று பிற்பகல் தொடங்குகிகறது. இதில், முக்கிய வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவில், இதுவரை 15 சீசன் நடைபெற்றுள்ளது. இதில், சிஎஸ்கே அணி 13 முறை ஆடியுள்ளது. அதில் 4 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. அதுபோல ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனராக இருந்து வழி நடத்தியவர் எம்எஸ்தோனி. தற்போது சிஎஸ்கே அணியில் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 வீரர்களை எடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த பரபரப்பான நிலையில்தான் இன்று ஐபிஎல் மினி ஏலம், முதன்முறையாக, கேரளாவின் கொச்சி அருகே உள்ள தீவு ஒன்றில் உள்ள பிரமாண்டமான கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று பிற்பகல் தொடங்கும் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings (CSK), டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals (DC), குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans (GT), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders (KKR), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants (LSG), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians (MI), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings (PBKS), ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals (RR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad (SRH) ஆகிய 10 அணிகளின் தலைவர்களும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் எடுக்க தயாராகி வருகின்றனர்.
ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 273 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 132 வீரர்கள் வெளிநாட்ட வர்கள்.
ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களால் நிரப்பப்படுவார்கள்.
சென்னைக்கு இன்னும் வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களின் இடத்தை நிரப்ப வேண்டும். எனவே, தோனி எதிர்பார்க்கும் ஸ்பார்க் உள்ளவர்களை இந்த ஏலத்தில் அள்ளிப்போட்டு, மீண்டும் அந்த Core-ஐ வலுவாக்க நினைப்பார். அந்த வகையில், தோனி அணி வாங்க நினைக்கும் வீரர்கள், வேறு வார்த்தையில் சொல்வதென்றால் சிஎஸ்கே அணிக்கு தேவைப்படும், முதல் 3 வீரர்களின் விவரங்களை இங்க காணலாம்.
சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேம்ரூன் கிரீன் இவர்களில் யாரையாவது ஒருவரை டூவைன் பிராவோவை ஈடுகட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் எடுக்க நினைக்கும். ஆனால், மூன்று பேரும் அனைத்து அணிகளின் விருப்பப் பட்டியிலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
குறிப்பாக, அதிக தொகையை வைத்திருக்கும் ஹைதராபாத், பஞ்சாப் அணிகளுக்கு. எனவே, இந்த மூன்று வீரர்களுக்கு போகாமல் சிஎஸ்கே மற்றொரு இங்கிலாந்து வீரரான ஹேரி ப்ரூக்ஸ் இடம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தோனிக்கு பிறகு ஐபிஎல் கேப்டன் பொறுப்பில் தொடரும் வகையில், இந்திய வீரர்களான நாராயணன் ஜெகதீசன், பாபா இந்திரஜித், கேஎஸ் பரத், முகமது அசாரூதின். ஜெகதீசன், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால் போன்றோரில் சிலரை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.