பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதன்முறையாக ஐபிஎல் வெற்றிக்கோப்பையை வென்றுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விராட் கேப்டனாக உள்ள இந்த அணியின் வெற்றி கர்நாடக மக்களால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வெற்றியை நினைகூரும் வகையில் RCB வெற்றி அணிவகுப்பு பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்றது. வெற்றிக்கோப்பை ஆர்சிபி அணியினர் ஊர்வலகமாக சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதை வெற்றி விழாவை காண மாநிலம் முழுவதும் இருந்து பல ஆயிரம் அங்கு குவிந்தனர். இதனால், கடுமையான போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது.
மேலும் விழா நடக்கும் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel