சென்னை: 2025ம் ஆண்டு நடைபெற உள்ள டாட்டா ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் (2025) தொடரின் மெகா ஏலதிற்கான தேதிகளை பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, ஏலத்தில் பங்கேற்க 1574 வீரர் பதிவுகள் செய்துள்ளனர். இவர்களில், 320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள், & 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏலம் நவம்பர் 24 மற்றும் 25ந்தேதிகள் நடைபெறும் ஏலமானது சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா நடத்தும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதுபோல ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் அணி வீரர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதில், தகுதியான வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்துக்கு எடுத்து தங்களது அணியின் வெற்றிகாக உபயோகப்படுத்தி வருகின்றன.
அதன்படி, : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலற்கான தேதிகளும், அது நடைபெறும் இடத்தையும் பிசிசிஐ அறிவித்து உள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த டெஸ்டின் 3-வது மற்றும் 4-வது நாட்களில் மெகா ஏலம் நடைபெறுகிறது.
முன்னதாக இந்த டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கும் நாட்களில் மெகா ஏலம் நடைபெறாது எனும் ஒரு தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற போகும் இந்த மெகா ஏலத்தில், மொத்தம் 1,574 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதில் 1165 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். மேலும், இதில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் கலந்து கொள்வதால் மெகா ஏலத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு என்பது உருவாகி இருக்கிறது.
இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் 2-வது ஐபிஎல் ஏலம் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2024 ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.