சார்ஜா: ஐபிஎல் தொடரின் 4வது நாள் ஆட்டமான நேற்று இரவு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின்போது, கடைசியில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதுடன், தோனி மீண்டும் ஃபார்மில் இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில், அவர் அடித்த சிக்சர் பந்து ஒன்று, மைத்துக்கு வெளியே சென்ற நிலையில், அங்கிருந்த ரசிகர் ஒருவர் அந்த பந்தை, மிகுந்த உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் தனது வீட்டு எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (செப்டம்பர்-19) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு இடையிலான 4-ஆவது லீக் போட்டி நடைபெற்றது.
போட்டியின்போது, டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி (MS.Dhoni) முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 9 சிக்ஸர்கள் விளாசி 74 ரன்களை குவித்தார். சென்னையில் சாம் குரான் 3 விக்கெட் வீழ்த்தினார். சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 217 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட துவங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய் 21, வாட்சன் 33 ரன்களுக்கு ஆட்ட மிழந்தனர். அடுத்து வந்த சாம் குரான் அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசி 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து, கெயிக்வாட் டக் அவுட் ஆனார். ஜாதவ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் டுபிளசிஸ் அதிரடி காட்டி சிக்ஸர்களாக பறக்க விட்டார்.
இருப்பினும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய தோனி சிங்கிள்களாக எடுத்தது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டுபிளசிஸ் 72(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 36 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி என்பது தெரிய வந்த நேரத்தில், கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார். அதில், ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. கேமரா ஸ்டேடியத்திற்கு வெளியே பந்தைப் பின்தொடர்ந்தது, அப்போது, போக்குவரத்துடன் ஒரு சாலையில் அந்த பந்து தரையிறங்கியது. ஒரு நபர் பந்தைச் சேகரித்து முகத்தில் புன்னகையுடன் ஓடுவதைக் காண முடிந்தது.
இந்த ஆட்டத்தின்போது, சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் விளாசியதால், மீண்டும் நட்சத்திர வீரர்களால், ஒருவராக உருவெடுத்தார். இங்கிலாந்து பந்து வீச்சாளர் டாம் குர்ரானின் பந்துவீச்சில் அடித்த மூன்று சிக்ஸர்களில் இரண்டு பூங்காவிற்கு வெளியே சென்றன.
இந்த போட்டியில் இரு தரப்பினரும் மொத்தம் 33 சிக்ஸர்கள் அடித்திருப்பது புதிய சாதனையாகும்.
2018 ஆம் ஆண்டில் ஒரு சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியில் அதிகபட்சமாக 33 சிக்ஸர்கள் அடித்தன.
ஐபிஎல் அதே பதிப்பில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சிஎஸ்கே போட்டியில் 31 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்கோர் விபரம் : ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 216 (சஞ்சு சாம்சன் 74, ஸ்டீவ் ஸ்மித் 69; சாம் குர்ரான் 3/33)
சென்னை சூப்பர் கிங்ஸ் 200/6 (ஃபாஃப் டு பிளெசிஸ் 72, ஷேன் வாட்சன் 33; ராகுல் தெவதியா 3/37) 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.