சென்னை
ஐபிஎல் 2020 போட்டிகளில் விளையாட நடந்த வீரர்கள் ஏலத்தில் 10 வீரர்களில் 3 பேர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் ஐ பி எல் போட்டிகளில் விளையாட கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். அவர்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலத்தில் அதிக விலை கோரும் அணியில் அவர்கள் விளையாடுவார்கள். சென்ற ஆண்டு நடந்த ஐ பி எல் போட்டிகளில் 9 தமிழக வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள்.
இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.
அவர்களின் பெயர மற்றும் அடிப்படை விலை பின் வருமாறு
1. வருண் சக்கரவர்த்தி – ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் – ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் – ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் – ரூ. 20 லட்சம்
5. ஹரி நிஷாந்த் – ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி – ரூ. 20 லட்சம்
7. மணிகண்டன் – ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் – ரூ. 20 லட்சம்
9. முகமது – ரூ. 20 லட்சம்
10. அபினவ் – ரூ. 20 லட்சம்
இவர்களில் சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி மற்றும் எம் சித்தார்த் ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் அணி மற்றும் விலை பின் வருமாறு
1. வருண் சக்கரவர்த்தி – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ரூ. 4 கோடி
2. சாய் கிஷோர் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ. 20 லட்சம்
3. எம் சித்தார்த் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ரூ. 20 லட்சம்
மீதமுள்ள 7 பேரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
வரும் 2020 ஐ பி எல் போட்டிகளில் மொத்தம் 11 தமிழக வீரர்கள் போட்டியிட உள்ளனர்.
அவர்களின் விவரம் பின் வருமாறு
1. ஆர். அஸ்வின் – தில்லி – ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் – கொல்கத்தா – ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் – ஹைதராபாத் – ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் – பெங்களூர் – ரூ. 3.20 கோடி
5. முரளி விஜய் – சென்னை – ரூ. 2 கோடி
6. நடராஜன் – ஹைதராபாத் – ரூ. 40 லட்சம்
7. ஜெகதீசன் – சென்னை – ரூ. 20 லட்சம்
8. எம். அஸ்வின் – பஞ்சாப் – ரூ. 20 லட்சம்
9. வருண் சக்கரவர்த்தி – கொல்கத்தா – ரூ. 4 கோடி
10. சாய் கிஷோர் – சென்னை – ரூ. 20 லட்சம்
11. எம் சித்தார்த் – கொல்கத்தா – ரூ. 20 லட்சம்