ஜெய்ப்பூர்

நேற்று இரவு நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்துள்ளது.

ஜெய்ப்பூரில் நேற்று ஐபிஎல் 2019 போட்டிகளின் லீக் ஆட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் சன்ரைசர்ஸ் பேட்டிங்கில் களம் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர்களாக வில்லியம்ஸ், மற்றும் வார்னர் பேட்டிங்கை தொடங்கினார்கள்.

கோபால் பந்து வீச்சில் வில்லியம்ஸ் தந்து 13 ஆம் ரன்னில் விக்கட் இழந்தார். அடுத்து வந்த மனீஷ் பாண்டேவும் வார்னரும் இணைந்து 75 ரன் எடுத்தனர். வார்னர் 37 ரன்களிலும் மணீஷ் 61 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். விஜய் சந்தர், ஹூடா, சாஹா, சாகிப் புவனேஷ்வர் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர். ஜூடா ரன் ஏதும் எடுக்கவில்லை.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 160 சன்கள் எடுத்திருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 161 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. தொடக்க வீரரகளான ரகானே மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் 78 ரன்கள் எடுத்தனர். லிவிங்ஸ்டன் 44 ரன்களிலும் ரகானே 39 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்ததாக ஸ்மித் 22 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடி அணிக்கு 48 ரன்கலை பெற்றுத் தந்தார். ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கான 161 ரன்களை அடைந்தது. அதை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை தோற்கடித்ததாக அறிவிக்கப்பட்டது.