மும்பை

பிஎல் 2019 போட்டிகளில் முதல் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

 

 

ஐபிஎல் 2019 போட்டிகளின் லீக் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டிகளின் இறுதியில் தரவரிசை புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அடுத்த தகுதிச் சுற்று மூன்று மற்றும் நான்காம் அணிகளுக்குள் நடைபெறும்.  இந்த சுற்றீல் வெல்லும் அணி முதல் தகுதிச் சுற்றில் தோற்கும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்குள் நுழையும்.

தற்போதைய நிலையில் முதல் இடத்தை பிடிக்க மூன்று அணிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகளாகும். இந்த அணிகளில் ஒவ்வொன்றும் முதல் இடத்துக்கு நுழைந்தாலும்  அடுத்த லீக் ஆட்டத்தில் சற்று பின் வாங்கி வருகின்றன.

தற்போதைய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது    இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் டில்லி கேபிடல்ஸ் அணிகள் உள்ளன.  நான்காவதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உள்ளது.