சென்னை
சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இன் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் முடிவடந்துள்ளன. இன்னும் 17 லீக் ஆட்டங்கள் பாக்கி உள்ளன. இந்த போட்டிகளின் அடிப்படையில் முதல் நான்கு இடம் பெற்ற அணிகள் குவாலிய்ஃபையர் போட்டியில் இடம் பெறும்.
இந்த குவாலிஃபையர் போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் அணிகளுக்கான போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி அடையும். மீதமுள்ள மூன்றாம் மற்றும் நான்காம் அணிகள் குவாலிஃபையர் முதல் சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டிகளில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்
முதலாம் குவாலிபையர் போட்டி சென்னையிலும் இரண்டாம் குவாலிபையர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுவதாக இருந்த நிலையில் அந்த போட்டி ஐதராபாத் நக்ரில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.