டில்லி:

ருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் எனும் சாதனையை இந்திய வீரர் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்த சாதனையை பெற்றிருந்த இலங்கை வீரர் குமார சங்ககரா சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

ரிஷப்  பந்த் தற்போது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாடி வருகிறார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம்  நடந்த போட்டியின்போது ரிஷப்  பந்த் 2 கேட்ச்களை பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ரிஷப்  பந்த் இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமே   15 கேட்சுகள் மற்றும் 5 ஸ்டம்பிங்குகள் என ஒட்டுமொத்தமாக 20 விக்கெட்டுகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இதன் காரணமாக தற்போது விக்கெட் கீப்பிங் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

ஏற்கனவே  இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா 19 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை முறியடித்துள்ளார்  ரிஷப் பந்த்.