புனே
ஐபில் 2018 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.
புனே நகரில் மகாராஷ்டிரா சங்க விளையாட்டரங்கில் நேற்று ஐபிஎல் 2018 ன் லீக் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்யவே பஞ்சாப் அணி பேட்டிங்கில் இறங்கியது. பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
அடுத்து இறங்கிய சென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்கள் ராயுடுவும் டு பிளசிஸும் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களை கவலைஇயது. இருப்பினும் அடுத்தடுத்து வந்த ஆட்டக்காரர்கள் நன்கு விளையாடி சென்னையை வெற்றி பெற செய்தனர் சென்னை சூபர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 159 ரன்கள் பெற்று 5 விக்கெட் வித்யாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தோற்கடித்தது.
தற்போதுள்ள தரவரிசைப் பட்டியலில் சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது.