பொல்லார்ட்
பொல்லார்ட்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐ.பி.எல். 2016 கிரிக்கெட் போட்டியின் 41-வதுஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
‘டாஸ்’  ஜெயித்த மும்பை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, கெய்ல் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
அதிரடி ஆட்டத்தை எதிர்பாத்து காத்திருந்த ரசிகர்களுக்கு இவருவம் ஏமாற்றத்தை அளித்தனர்.   விராட்கோலி மற்றும் கெய்ல் இருவரும்  சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.  லோகேஷ் ராகுல், டிவில்லியர்ஸ் ஜோடி இணைந்தது.  ஆறாவது ஓவர் முடிய பெங்களூரு அணி 25 ரன்களே  எடுத்திருந்தது.
பெங்களூர் முன்னணி வீரர்கள் டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் அடுத்து அடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, இந்த ஐ.பி.எல்,.  போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்துவரும் சச்சின் பேபி, லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.  இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். முடிவில் 20 ஓவர்களில் பெங்களூரு அணி 151 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியில் தொடக்கம் சற்று தடுமாற்றத்துடனே துவங்கியது. துவக்க  ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் , கேப்டன் ரோகித் சர்மா உட்பட அடுத்தடுத்து  முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன.
ஆனால்,  ஐ.பி.எல்.  அதிரடி வீரர்கள் என்று  கூறப்படும்  பொல்லார்ட் மற்றும் ஜோஸ்பட்லர் ஆகியோர் இன்றும் தங்களை நிரூபித்தனர். பவுண்டரி மற்றும் சிக்ஸர் என விளாசித்தள்ளினர்.
இறுதியில் மும்பை அணி 18.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து  ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.