திருப்போரூர்’
திருப்போரூர் கோவில் உண்டியலில் விழ்ந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருப்போரூர் பகுதியில் உள்ள கந்தசாமி கோவில் அறுபடைவீடுகளுக்கு ஒப்பானதாகும், எனவே இந்த கோவிலுக்கு தமிழ்காம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திசரி வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கட்ந்த ஆகஸ்ட் மாதம் இந்த கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சாமி தரிசனம் செய்ய வந்த போதுகுடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய ‘ஐபோன் 13புரோ’ ரக மொபைல் போனையும் தவறி போட்டுள்ளார். உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல் போனை திரும்பக் கேட்டுள்ளார்.
கோவில் நிர்வாகத்தினர் உண்டியல் காணிக்கை எண்ணும்போது தகவல் அளிப்பதாக கூறி அனுப்பி வைத்த நிலையில் கடந்த மாதம் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டபோது உண்டியலில் இருந்து ஐபோன் எடுக்கப்பட்டது. இதனையடுத்து தினேசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வந்திருந்தார்.
அவர் தனது மொபைல் போனை தருமாறு கேட்டதற்கு கோவில் நிர்வாகத்தினர், ‘உண்டியலில் போட்டவை முருகனுக்கு சொந்தமாவது. மொபைல் போனை தர முடியாது’, வேண்டுமென்றால், மொபைல் போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்து கொள்ளலாம் என்று கூறினர்.
தினேஷ், தன்னிடம் தரவுகளை பெற லேப்டாப் உள்ளிட்டவை இல்லை. ஓரிரு நாளில் ஏற்பாட்டுடன் வந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதாக தெரிவித்தார். அந்த ஐபோன் கோவில் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டதை தொடர்ந்து திருப்போரூர் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் திருப்பி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
எனவே திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது அறநிலையத்துறை விதிகளின்படி ஐபோன் ஏலம் விடப்பட்ட போது அதை உரிமையாளர் தினேஷ், ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். தனது ஐபோன் நீண்ட நாட்கள் கழித்து திரும்ப கிடைத்துள்ளதால் தினேஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.