ரஜோரி:

ந்திய விமானப்படை நேற்று பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை சூறையாடிய நிலையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் ரஜோரி ராணுவ நிலை அருகே குண்டு வீசியதாக உறுதிப்படுத்தப்படாத  தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல  நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம், இந்திய விமானப்படையினரால் விரட்டி யடிக்கப்பட்டது.

இந்த நிலையில் அத்துமீறும் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டுவீழ்த்த இந்திய விமானப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் அதிரடி தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்,  இந்திய எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் விமானப்படை முயற்சிகள் செய்து வருகிறது. இதை இந்திய விமானப்படையினர் விரட்டி அடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்திய ராணுவப்படை உள்ள ரஜோரி பகுதியில் குண்டு வீசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன்  அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து,  காஷ்மீர் வான்வெளியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அத்துமீறும் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  நவ்சேரா பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானங்கள் விரட்டியத்து உள்ளது. இதன் காரணமாக பதற்றம் மேலும் நீடித்து வருகிறது.