சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
புலிகள் தோலுக்காகவும், வியாபாரத்துக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டது. எனவே 2000-களில் புலிகளின் எண்ணிக்கை 3000-4000 ஆக மாறிவிட்டது. தற்போதைய காலத்தில் எடுத்துக் கொண்டால் உலகிலேயே புலிகள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 60% புலிகள் இந்தியாவில் உள்ளன. 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2016ல் அதன் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 3,890 புலிகள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 2,226 புலிகள் உள்ளன. இந்தியாவுக்கு அடுத்து அதிகளவு புலிகள் உள்ள நாடு ரஷ்யா (433). இவை தவிர இந்தோனேஷியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, பங்களாதேஷில் 106, பூடானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, லாவோஸ் நாட்டில் வெறும் 2 என்ற விதத்தில் புலிகள் எண்ணிக்கை இருந்து வருகிறது.
சென்னையை அடுத்து வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் மொத்தம் 31 புலிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.