டெல்லி

ந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 4300 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேருவார்கள் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச முதலீட்டு நிறுவனமான ஹென்றி அண்ட் பார்ட்னர்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

”தற்போதைய நிலவரப்படி 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து சுமார் 4300 கோடீஸ்வரகள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது.. அதே வேளையில் 2024 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 128,000 மில்லியனர்கள் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல இந்திய கோடீஸ்வரர்களின் முதல் சாய்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்கிறார்கள்

அதே வேளையில் என்னதான், செல்வந்தர்கள் இடம்பெயர்ந்தாலும், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து பங்களிக்கின்றனர். இந்தியாவில் அவர்களின் வணிகங்கள் மற்றும் வீடுகள் தொடர்ந்து இருப்பது பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க உதவுகிறது

.இந்த கோடீஸ்வரர்களால் தொடங்கப்பட்ட தொழில்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் பலனளிக்கிறது. உதாரணமாக, மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான உயர் ஊதிய வேலைகளை உருவாக்கியுள்ளன, இது மில்லியனர்களின் வணிகங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார தாக்கத்தைக் காட்டுகிறது.

எங்கள் பார்வையில், இந்தியா இழப்பதை விட அதிகமான புதிய கோடீஸ்வரர்களை உற்பத்தி செய்து வருவதால், இந்த இடப்பெயர்வு கவலைக்குரியவை அல்ல.  இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களில் பெரும்பாலோர், நாட்டின் வணிக தொடர்பை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள், இது ஒரு பாசிட்டிவ் அறிகுறியாகும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.