டெல்லி: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டருந்த டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. முதல்கட்டமாக 14 நாடுகளுக்கு வணிக ரீதியிலான சர்வதேச விமானங்களை இயக்கவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இடையிடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு வந்தனர். பின்னர் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதும், சில நாடுகளுக்கு குறிப்பிட்ட விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்தியஅரசு முடிவு செய்துளளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வணிகரீதியான சர்வதேச விமான போக்கு வரத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் இயக்குவது குறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவ ரத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட 14 நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகள் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய கொரோனா பிறழ்வு பி.1.1.529 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு நாடுகள் உள்பட, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், சீனா, பிரேசில், பங்களாதேஷ், மொரிஷியஸ், ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் ஹாங்காங் நாடுகளும் இடம்பெற்றுள்ளன.