ஜெனிவா:

கொரேனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள் என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார  அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெறும் ஊரடங்கு ம்ட்டும் போதாது என்றும் கண்டித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.  இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

‘இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுங்கள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கொரோனா  பரவலைக் கட்டுப்படுத்த, பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஆனால், இதன்மூலம் மட்டும் வைரஸ் பரவலை எதிர்கொள்ள முடியாது. இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி, அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்,  தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் துரிதகதியில் செயல்பட்டு கொரோனா வைரசை அழித்தொழிக்க வேண்டும்.

இவ்வாறு  அதில் கூறி உள்ளார்.