வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு

Must read

ஐதராபாத்:வெளிநாடுகளில் பணி புரியும் போது இறந்து போகும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்க அரசு முயற்சிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்.தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“ஏற்கனவே ப்ரவஸி பாரதீய பீமா யோஜனா எனும் காப்பீடு திட்டம் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் செயல்படுத்தப்படுகிறது. . அத்திட்டம் விபத்தினால் ஏற்படும் இறப்புகளுக்கு மட்டும் இழப்பீடு தருகிறது. ஆனால் இயற்கையான மரணங்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படுவதில்லை.  ஆகவே  இயற்கையான மரணங்களுக்கும் இழப்பீடு வழங்குகிற திட்டம் ஒன்றை நாம் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. இதனால் வெளிநாட்டில் இறந்து போகும் தொழிலாளியின் குடும்பமும் பலன் பெறும். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

 

More articles

Latest article