சென்னை: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பயன்படுத்தும் இன்சுலின் மருந்துகளின் விலை, சமீப மாதங்களில் 20% வரை ஏறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அமெரிக்க டாலரின் மதிப்பு, கடந்த சில மாதங்களாக ஏற்ற – இறக்கங்களை சந்தித்து வருவதால், சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
இதனால், பெருமளவில் சர்க்கரை வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலகட்டத்தில், இன்சுலின் மருந்துகளின் விலை 3.5% என்ற அளவிலிருந்து 20.9% என்ற அளவிற்கு ஏறியுள்ளது.
இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற – இறக்கங்கள்தான் என்று மருந்து நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
– மதுரை மாயாண்டி