சென்னை:

மிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத  22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
சுமார்  537 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்ட வருகின்றன. இதில் பல கல்லூரிகளில் போதிய கட்டமைப்பு, ஆசிரியர்கள் இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. பல கல்லூரிகளில் மாணவ மாணவிகளே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றது.

இதையடுத்து, தமிகத்தில் உள்ள 537 கல்லூரிகளை ஆய்வு செய்யத அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்து, அதற்கான குழுவை அமைத்தது. இந்த ஆய்வுக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கல்லூரிகளின் உள்கட்டமை, ஆசிரியர்கள் விவரம் குறித்து ஆய்வு நடத்தினார்.

இதில்,  “போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, தடை பிறப்பிக்கப்பட்ட  22 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக் கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதுழ. அதன் காரணமாக அந்த 22 கல்லூரிகளிலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 92 கல்லூரிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, போதிய பேராசிரியர் இல்லாததால் 300 பாடப் பிரிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

537 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள் என மொத்தம் 3ஆயிரத்து 523 படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் முதல்கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகளை உரிய முறையில் பூர்த்தி செய்த 287 பொறியியல் கல்லூரிகளின் 2 ஆயிரத்து 678 இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியதோடு, நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இதில், நிபந்தனைகளை பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளின் 421 இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மீதமுள்ள 92 பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம் வழங்கிய கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததுடன், உரிய விளக்கமும் அளிக்கவில்லை.

இதனால், அந்த கல்லூரிகளில் இளநிலை பிரிவின் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாகக் குறைத்தும், முதுநிலைப்பிரிவின் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதித்தும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.