டெல்லி: மார்பைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு என்றால் என்ன என்பது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியதை சட்ட வல்லுநர்கள் கண்டித்துள்ளனர். இந்த தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளதுடன், நீதிபதிகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அறிக்கைகள் காரணமாக நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு தொடர்பாக ‘இந்தியாவின் பெண்கள் நாங்கள்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் உச்சநீதிமனற்ம் தானேகவே முன்வந்து இந்த வழக்கை பதிவு விசாரணையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இன்று உச்சநீதிமனற் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அலகாபாத் நீதிபதியின் சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த கருத்துக்கள் நீதிபதியின் திறன் குறைபாட்டையும், உணர்ச்சியற்ற தன்மையையும் காட்டுகிறது. ஒரு நீதிபதிக்கு எதிராக, இப்படி சொல்வதற்கே வேதனையாக இருக்கிறது என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, இதுதொடர்பாக உ.பி. மாநிலஅரசு மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
முன்னதாக பாலியல் வழக்கு ஒன்றை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் , மார்ச் 17 அன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில், , மார்பகத்தைப் பிடித்து ‘பைஜாமா’ கயிற்றை இழுப்பது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது. அதாவது, மைனர் பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின் கயிற்றை உடைப்பது மற்றும் ஒரு பாலத்துக்கு அடியில் இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று கூறயது. இந்தச் செயல்கள் முதன்மையான பார்வையில் போக்சோ சட்டத்தின் கீழ் ‘மோசமான பாலியல் வன்கொடுமை’ குற்றமாக இருக்கும் என்றும், இது குறைந்த தண்டனையை அளிக்கிறது என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உ.பி. மாநில காஸ்கஞ்ச் சிறப்பு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு சீராய்வு மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமனற் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது, மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று ஆஜராகி, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை கண்டித்துடன், இது அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.
இதையடுத்து நிதிபதிகள் அமர்வு, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், இது, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் திறன் குறைபாடு, உணர்வற்ற தன்மை என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துடன் , உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து கடுமையான வேறுபாட்டை வெளிப்படுத்தியது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு “அதிர்ச்சியளிப்பதாக” பெஞ்ச் குறிப்பிட்டது.
“குற்றச்சாட்டுக்குள்ளான தீர்ப்பில் கூறப்பட்ட சில கருத்துக்கள், குறிப்பாக பத்திகள் 21, 24 மற்றும் 26, தீர்ப்பை எழுதியவரின் தரப்பில் முழுமையான உணர்திறன் இல்லாததை சித்தரிக்கின்றன என்பதை நாங்கள் கூற சிரமப்படுகிறோம்” என்று பெஞ்ச் உத்தரவில் குறிப்பிட்டது.
மேலும், இந்த வழக்கில், தீர்ப்பு உடனடியாக பிறப்பிக்கப்படவில்லை, ஆனால் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஒத்திவைத்த பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக கூறிய உச்சநீதிமன்ற அமர்வு, இதன் பொருள் நீதிபதி உரிய பரிசீலனை மற்றும் மனதைப் பயன்படுத்திய பிறகு தீர்ப்பை வழங்கினார்.
இந்த நடைமுறைகள், “சட்டத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் தெரியாதவை மற்றும் முழுமையான உணர்வின்மை மற்றும் மனிதாபிமானமற்ற அணுகுமுறையை சித்தரிக்கின்றன” என்பதால், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பெஞ்ச் குறிப்பிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மத்தியஅரசு, உத்தரபிரதேச மாநிலம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியது.