புதுடெல்லி:
GeM-இல் தங்களுடைய பொருட்களை பதிவு செய்யும் அனைவருக்கும், சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு மின்னணு சந்தை.

அரசு மின்னணு சந்தை (GeM) ஒரு சிறப்பான நோக்கத்துடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், அனைத்து விற்பனையாளர்களும் தங்களுடைய பொருட்களை அரசு மின்னணு சந்தையின் கீழ் பதிவு செய்வதற்கு முன்பாக அது எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்று கட்டாயமாக பதிவிட வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தங்களுடைய பொருட்களை பதிவேற்றம் செய்த விற்பனையாளர்களுக்கு., வழக்கமாக அதை புதுப்பிக்க மின்னணு சந்தை நினைவூட்டுகிறது, விற்பனையாளர்கள் தங்களுடைய பொருட்களின் பதிவை புதுப்பிக்க வில்லை என்றாலோ அது எங்கு உற்பத்தி செய்யப்பட்டது என்று பதிவு செய்யாமல் விட்டாலோ, அவர்களுடைய பொருட்கள் அரசு மின்னணு சந்தையில்லிருந்து நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த முக்கியமான அம்சத்தை அரசு மின்னணு சந்தை “மேக் இன் இந்தியா” மற்றும் “ஆத்மநிர்பார் பாரத்தை” ஊக்குவிக்கவே தொடங்கியுள்ளது.

மேலும் அவர்கள் பதிவு செய்யும் பொருள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது மட்டுமில்லாமல் அது எத்தனை சதவீதம் உள்நாட்டு பொருட்களை கொண்டுள்ளது என்பதையும் பதிவிட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது சந்தையில் கிடைக்கும் அனைத்து பொருட்களுக்கும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது மட்டுமல்லாமல் உள்நாட்டு பொருட்கள் அதில் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதில் “மேக் இன் இந்தியா” முறையை செயல்படுத்தும் படி குறைந்தபட்சம் 50% அதில் உள்நாட்டு பொருட்கள் சேர்க்கப்பட்டு இருந்தால் மட்டுமே மக்கள் அதனை வாங்க முடியும். ஏலத்தில் எடுப்பவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். ரூபாய் 200 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுப்பவர்களுக்கு மட்டுமே தாங்கள் முன்னுரிமை அளிப்பதாக அரசு மின்னணு சந்தை குறிப்பிட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க அரசு மின்னணு சந்தை, சிறுசிறு உள்ளூர் விற்பனையாளர்களும் இதைப் பயன்படுத்தும் படி வசதி செய்து கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதை அனைவரும் மிக எளிதாக பயன்படுத்தும் முறையில் அரசு மின்னணு சந்தை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது. குறிப்பாக அரசாங்கத்திற்கு covid-19 எதிர்த்து போராட மிகமுக்கியமாக விரைவாக ஏதாவது தேவைப்பட்டாலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு மின்னணு சந்தையில் கொள்முதல் செய்வதும், பொருட்களை வாங்குவதும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள புதிய சட்ட எண். 149- இன் படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.