புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் புதிதாகப் பிறந்த 4,76,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் துணை-சஹாரா பகுதிகள் இவற்றுள் முக்கியமானவை என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியாவில் மட்டும் மொத்தம் 116000 குழந்தைகள், தாங்கள் பிறந்த ஒரு மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் மரணித்துள்ளனர்.
அதேபோன்று துணை-சஹாரா பகுதியில், காற்று மாசுபாட்டால் புதிதாய் பிறந்து மரணித்த குழந்தைகளின் எண்ணிக்கை 236000 என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸிடிட்யூட் மற்றும் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யுவேஷன்ஸ் குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் புராஜெக்ட் வெளியிட்டுள்ளன.
கர்ப்பிணி தாய்மார்கள் மோசமான காற்று மாசுபாட்டில் இருக்கையில், அவர்களின் குழந்தை மிகவும் சிறியதாகவோ அல்லது குறைப்பிரசவத்திலோ பிறக்கலாம்.
இளங்குழந்தைகளில் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு சமூகத்தின் எதிர்காலத்திற்குமே ஆபத்தாக உள்ளது. குறிப்பாக, தெற்காசியா மற்றும் துணை-சஹாராப் பகுதிகளில் நிலைமை மோசமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.