கோவை அரசு கல்லூரி சாலை பகுதியில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை, அக்கல்லூரி மாணவர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி சாலையில், பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை ஒன்றை, பையில் வைத்துவிட்டு பெற்றோர் சென்றிருக்கின்றனர். அக்குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, அப்பகுதிக்கு வந்த கலைக்கல்லூரி மாணவர்கள், கைவிடப்பட்ட அக்குழந்தையை மீட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து கலைக்கல்லூரி வளாகத்திற்கு விரைந்த காவலர்கள், குழந்தையை மீட்டு, அரசு மருத்துவனமையில் சேர்த்ததோடு இவ்விவகாரம் தொடர்பாக வழக்கும் பதிந்து விசாரித்து வருகின்றனர்.