சென்னை: தமிழக அரசின், தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில்  இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழ்க சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, தொழில்துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, தமிழ்நாட்டில் தற்போதுள்ள தொழில் துறை பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அதன்படி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் என்று கூறினார்.

மேலும்,  மாநில அளவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையகரகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும். கடத்தலை தடுக்க வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ.5 லட்சத்துடன் விருது வழங்கப்படும். அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். தமிழ் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் போட்டிகள் நடத்த ரூ.16 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டார்.