இந்திராணி முகர்ஜி

மும்பை:

ளம்பெண் ஷீனாபோராவை கொலை செய்து எரித்து கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திரானி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மும்பை ஷீனா போரா என்ற இளம்பெண்  கொலையில், அவரை அவரது தாயாரே கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இது கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்றது.

போலீசாரின் விசாரணையை தொடர்ந்து, ஷீனா போராவை கொலை செய்து எரித்தது அவரது தாய் இந்திராணி முகர்ஜி என்பது உறுதியானது. இதையடுத்து,  இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர்  பீட்டர் முகர்ஜி ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு  கைது செய்யப்பட்டு, மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி இந்திராணி முகர்ஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போதும் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படு கிறது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு அவரை  மும்பையில்  ஜே.ஜே.மருத்துவமனையில் சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சியு) சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.