ந்தூர்

பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ. 1000 பரிசளிப்பதை இந்தூர் மக்கள் வரவேற்றுள்ளனர்.

இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற மத்திய பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்;அடி இந்தூரில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டு பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவருகின்றனர். மக்களிடையே பிச்சைக்காரர்களை அகற்றும் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மக்கள் தங்கள் பகுதிகளில் பிச்சை கேட்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்க முன்வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சிய ஆஷிஷ் சிங்,

“பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட எண்ணில் சுமார் 200 பேர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் கொடுத்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.