இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஜகார்த்தா உட்பட பல நகரங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழகிழமை டெலிவரி டிரைவர் ஒருவரை போலீஸ் வாகனம் மோதிய காட்சி வெளிவந்ததை அடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
மாகாசார் (Makassar) நகரில் கவுன்சில் கட்டிடம் எரிக்கப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர் என்று யோக்யாகார்த்தா பல்கலைக்கழகம் உறுதி செய்தது.
கலவரத்தை அடுத்து தனது சீன பயணத்தை ரத்து செய்த இந்தோனேசிய அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிவந்த சலுகைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel