ஜகார்த்தா:

ந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள அரசு அலுவலத்துக்குள் புயங்கரவாதிகள் புகுந்தனர். இதன் காரணமாக அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஜாவா தீவில் உள்ள பாண்டங் நகர பூங்காவில் குண்டு வெடித்தது. அதைத்தொடர்ந்து மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்தனர். உடனடியாக அங்கிருந்த அரசு அலுவலர்களை வெளியேற்றிவிட்டு, அலுவலகத்தை தங்கம் கைவசம் கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அலுவலகத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். அலுவலகத்தினுள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளும் போலீசாரை எதிர்த்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதன் காரணமாக அலுவலகத்தில் ஒருசில இடங்களில் தீப்பற்றியது.

பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்த போலீசார் முயற்சித்து வந்தனர். இதற்கிடையில், அந்த பகுதியில் உள்ள டி.வி நிலையத்தையும் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.

தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. இந்த திடீர் அரசு அலுவலகம் மற்றும் டிவி நிலையம் கைப்பற்றுதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று இந்தோனேசிய அரசு கூறி உள்ளது.