வாஷிங்டன்
இந்திய வம்சாவளியினரான அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி தற்போது இங்கிலாந்தில் உருவாகி உள்ள வைரஸ் ஆபத்தானது இல்லை என உ|றுதி அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் அது கொரோனாவை விட ஆபத்தானது எனவும் தகவல்கள் வெளியாகின. அந்த வைரஸ் தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருவதாக செய்திகள் வெளியானதால் மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். இங்கிலாந்துக்குச் செல்லவும் அங்கிருந்து வரவும் ஒரு சில நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்திய வம்சாவளியினரான அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி புதிய அதிபர் ஜோ பைடனால் தொற்று நோய்த் தடுப்பு தலைமை மருத்துவர்ஃபாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 43 வயதாகும் மூர்த்தி இந்த வைரஸ் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர், “தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் இது வேகமாகப் பரவக் கூடியது எனவும் கொரோனாவை விட பயங்கரமானது எனவும் கூறப்படுகிறது,.
இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்பதும் மிகவும் அபாயமானது என்பதும் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஆகும். இந்த வைரஸ் ஆபத்தானது இல்லை. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே வைரஸ் பரவுதல் நின்று விடும். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள முகக் கவசம், சமுதாய இடைவெளி, கை கழுவுதல் போன்றவையே இதைத் தடுக்க போதுமானது” எனத் தெரிவித்துள்ளார்.