டில்லி

றைமுக வரி வருமானம் பெருமளவில் குறையும் என நிதிச் செயலர் கர்க் கூறி உள்ளார்.

நேர்முக வரிகள் என்பது நேரடியாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் ஆகும்.  வருமான வரி, ஜிஎஸ்டி, சொத்து வரி போன்றவை இந்த பிரிவின் கீழ் வரும்.   மறைமுக வரிகள் என்பது நேரடியாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படாத வரிகள் ஆகும்.  வாட், எக்சைஸ் டூட்டி உள்ளிட்ட வரிகள் இந்த பிரிவின் கீழ் வரும்.

நேற்று நிதிச் செயலர் எஸ் சி கர்க் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “ஜி எஸ் டி வரியின் மூலம் வருமானம் பிப்ரவரி மாதம் ரூ.97,247 கோடி வந்துள்ளது.  அதற்கு முந்தைய மாதமான ஜனவரியி இது ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்தது.

தற்போது ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருவதால் ஜிஎஸ்டி வருமானம் ஓரளவு மட்டுமே குறையும்.  அரசு அந்த குறைவை ஈடுகட்டிவிடும். ஆனால் மறைமுக வரிகள் வருமானம் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.