டில்லி
டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதல் முனையம் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது. அதையொட்டி வெளிநாடுகளுக்கு செல்வோர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டது. அனைத்து சர்வதேச விமான நிலயங்களும் மூடப்பட்டன.
அப்போது டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதலாம் முனையம் மூடப்பட்டது. கொரோனா பரவல் சற்றே குறைந்த வேளையில் இரண்டாம் அலை கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் இந்த முனையம் திறக்கப்படாமல் இருந்தது.
தற்போது கொரோனா தாக்கம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி உள்ளது. எனவே அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அவ்வகையில் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதலாம் மையம் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.