கவுகாத்தி:
சாம் மாநிலத்தின் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு இன்டிகோ விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது.
flight
சம்பவத்தன்று கவுகாத்தி சர்வதேச விமான நிலையதிலிருந்து சென்னை கிளம்பிகொண்டிருந்த இன்டிகோ விமானமும், அதே நேரத்தில் மும்பையிலிருந்து கவுகாத்தி வந்தடைந்த இன்டிகோ விமானமும் மோதுவது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
பருவமழை காரணமாக வட மாநிலங்களில் சீதோஷ்ன நிலை மாறுபடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கவுகாத்தி லோகபிரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தில்,  இன்டிகோ விமானம் ஒன்று சென்னை  செல்ல ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, மும்பையிலிருந்து கவுகாத்தி  வந்த மற்றொரு இன்டிகோ விமானம் இறங்க முயற்சி செய்தது.
மழை காரணமாக விமான ஓடு பாதை சரியாக தெரியாத நிலையில் இரண்டு விமானங்களும் சுமார் 30 அடி இடைவெளிக்குள் ஒன்றோடொன்று மோதும் நிலை ஏற்பட்டது.
சென்னை விமானத்தின் விமானி உடனடியாக விமானத்தை மேலே எழுப்பியதால்  இரு விமானங்களும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இதனால் விமானத்தில் ஏற்பட்ட அசைவினால், விமானத்தில் பயணம் செய்த  4 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி செய்ததாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.