னாஜி:

கோவாவில் ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே கிளம்பிச் சென்றதால் பயணிகள் துயருக்கு உள்ளாகினர்

பொதுவாக பேருந்தோ, ரயிலோ, விமானமோ தாமதமாக வந்து பயணிகளை தவிக்க வைக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக பயணிகள் புகார் அளித்த சம்பவம் கோவா தலைநகர் பனாஜியில் நடந்திருக்கிறது.

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான எண் 6E 259 என்ற விமானம் கோவா தலைநகர் பனாஜியில் இருந்து இரவு 10.50 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 12.05 மணிக்கு ஐதராபாத் நகருக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் செல்ல பல பயணிகள் முன்பதிவு செய்துவிட்டு பனாஜியில் காத்திருந்தனர்.

ஆனால் இந்த விமானம், அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு 25 நிமிடங்களுக்கு முன்னதாகவே கிளம்பிவிட்டது.

இதனால் அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் 14 பேர், பனாஜி விமானநிலையத்தில் தவித்து நின்றனர்.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளிடம் பயணிகள் குற்றம்சாட்டினர்.

ஆனால், இதனை இண்டிகோ விமான நிறுவனம் மறுத்துள்ளது. அதன் செய்தி தொடர்பாளர், “ விமானத்திற்கு செல்வதற்கான பாதையில் உள்ள கதவு, இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. ஆனால், விமானத்தை தவற விட்டவர்கள் இரவு 10.33 மணிக்கு தான் வந்தனர். விமானம் கிளம்புவது குறித்து ஒலிபெருக்கியில் பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டும் குறிப்பிட்ட அந்த பயணிகள் அவர்கள் அளித்த செல்போன் எண் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் பயனில்லை. பயணிகளை நாங்கள் தேடியது விமான நிலையத்தில் பலருக்கும் தெரியும். ஆகவே எங்கள் மீது தவறில்லை.

அதே நேரம்,  விமானத்தை தவற விட்டவர்களை  காலை எங்களுக்கு சொந்தமான வேறு விமானத்தில் இலவசமாக அனுப்பி வைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.