பாரிஸ்: பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் வாழ் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதற்கான தொடக்க விழா ஈபிஃ டவரில் நடைபெறும் என்றும் கூறினார்.

UPI என்றால் Unified Payment Interface(ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு) என்பது NPCI மூலம் செயல்படுத்தப்படும் ஓரு கட்டண முறையாகும். UPI ஐடி என்பது UPIயில் உங்களை அடையாளப்படுத்தும் முகவரியாகும் (பொதுவாக yourname@bankname என்ற வடிவில் இருக்கும்).n இது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடியாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவுகிறது. UPI என்பது பேமெண்ட் ஆப்ஸில் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கான பேங்க் அமைப்பாகும். Google Payயில் பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்க, UPI உடன் உங்கள் பேங்க் செயல்பட வேண்டும்.  இதன்மூலம் 24 மணி நேரமும் நாம் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர், அந்நாட்டின் தேசிய தினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  இந்திய நேரப்படி நேற்று  (13ந்தேதி) பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார். பின்னர், அங்கு வழும் புலம்பெயர் இந்தியர்களை சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்ற சேவை UPI-ஐ இனிமேல் பிரான்சில பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியா- பிரான்ஸ் UPI பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து இந்த முறை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்துடன் செல்ல வேண்டாம். UPI பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். இந்தியாவின் UPI பல வங்கி கணக்குகளை சிங்கிள் மொபைல் அப்ளிகேசன் மூலம் எளிதாக கையளாமுடியும். ஏற்கனவே கடந்த 2022-ல் என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் தொடர்பாக இந்திய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு லைரா எனப் பெயரிட்டிருந்தது. அதன்படி, தற்போது இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைக்கு பிரான்ஸ் அனுமதி வழங்கி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இணையவழி பண பரிவர்த்தனைகளை ஊக்கும் வகையில், டிஜிட்டல் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த  2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. தற்போது யுபுஐ அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. சாதாரண மக்களம் யுபிஐ ஐடி பயன்படுத்தும் நிலைக்க உயர்ந்துள்ளனர்.

இந்தியாவின் யுபிஐ ஐடி-க்கு ஏற்கனவே , ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது பிரான்சும் அனுமதி வழங்கி உள்ளது.