நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது இந்தியர்களுக்கு மேலும் பெருமையை சேர்ந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது, தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் சென்னை ஐஐடியில் படித்தவர்.
உலகின் நம்பர்1 இணைய தள நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை பதவியில் இரு இந்தியர்கள் இருப்பது, இந்தியர்களுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது.
அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கூகுள் . இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம் (Search engine), மேகக் கணிமை (Clound computer) , இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. இந்நிறுவனத்து இந்தியா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. இன்றைய இணையதள உலாவலில் கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரே முன்னிலையில் உள்ளது. கூகுளின் மிக விரைவான வளர்ச்சியினூடே, பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
மேலும், கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற கூகுள் பயன்பாடுகளும், பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. சமீபத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை அமல்படுத்தி உள்ளது.
இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம், கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை, உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.
இந்த மாபெரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்தவரும், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கூகுள் பிச்சை இருந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது, தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பிரபாகர் ராகவன், ஐஐடி சென்னையில் பட்டம் படித்தவர், பின்னர் கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
பல மென்பொருள் நிறுவனங்கள், கடுமையான நிதிச்சிக்கலில் சிக்கி உள்ள நிலையில், கூகுளும் நிதிச்சிக்கலை தீர்க்க பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்த சூழ் நிலையில், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியாவைச்சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் ஏற்கனவே யாஹூ நிறுவனத்தில் பணிய்றறி உள்ளார். மேலும், search ranking, ad systems மற்றும் marketplace design ஆகிய துறை சார்ந்து பணியாற்றி உள்ளார். 64 வயதான இவர், 2012-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார்.
கூகுள் கிளவுட், கூகுள் ஆப்ஸ் ஆகிய துறைகளுக்குத் தலைமை தாங்கிய பிரபாகர், ஜி மெயில், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றையும் மேலாண்மை செய்துள்ளார். 2018-ம் ஆண்டு கூகுள் சர்ச் பிரிவுக்கு பிரபாகர் பொறுப்பேற்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக துறை சார்ந்து இயங்கி வரும் இவர், 100-க்கும் மேற்பட ஆராய்ச்சித் தாள்களைப் பிரசுரம் செய்துள்ளார். 20 காப்புரிமைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.
ஏற்கனவே இந்தியர்கள் பலர் கூகுள், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, ஐபிஎம், அடோப் உள்ளிட்ட பல பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.