டில்லி:
இந்தியாவின் பல மொழிகள் அவர்களுடைய பலவீனம் அல்ல என்று தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நாட்டின் தேசிய மொழிகளான 23 கொடி ஈமோஜிகளைக் வெளியிட்டு டிவிட் பதிவிட்டு உள்ளார்.
அமித்ஷாவின் இந்தி திணிப்பு மற்றும் நாடு முழுவதும் இந்தி ஒரு பொதுவான மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பது தொடர்பான டிவிட், நாடு முழுவதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள், அமித்ஷாவின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார்.
அதில், நாடு முழுவதும் பேசப்படும் தேசிய மொழிகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, மொத்தம் 23 மொழிகள் உடன் தேசியக்கொடி ஈமோஜிகளையும் இணைத்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அத்துடன், “இந்தியாவின் பல மொழிகள் அவளுடைய பலவீனம் அல்ல” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
நாட்டில், இந்தி அதிகம் பேசப்படுவதால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்ற அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு எதிராக பேசிய பல அரசியல்வாதிகளுடன் காந்தி இணைகிறார். தற்போது, இந்தி மற்றும் ஆங்கிலம் மையத்தின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன.
முன்னதாக, காங்கிரஸ் தரப்பிலும், அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில், நாட்டில் “மூன்று மொழி சூத்திரம்” பற்றி மறுபரிசீலனை செய்ய எந்த அறிகுறியும் கொடுக்கப்படக்கூடாது, ஏனெனில் இது நாட்டில் கலவரத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கும் என்றும், மூன்று மொழிகள் சூத்திரம் (மும்மொழிக் கொள்கை) பொதுவாக இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழியை உள்ளடக்கியது.