டில்லி
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15 அன்று ஐசிஎம்ஆர் அறிமுகப்படுத்த உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை, அனைத்து நாடுகளும் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. அவ்வகையில் இந்தியாவிலும் பல மருந்து நிறுவனங்கள் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் ஐ சி எம் ஆர் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் இணைந்து ஒரு தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளது.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி சார்ஸ் கோவ் 2 மருந்திலிருந்து புனே தொற்று நோய் கல்வியகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது இறுதிக் கட்ட சோதனையில் இந்த தடுப்பூசி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐசிஎம்ஆர் இந்த இந்தியாவின் முதல் தடுப்பூசியை வரும் ஆகஸ்ட் 15 அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருவதாக ஐசிஎம்ஆர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சோதனைகள் விசாகப்பட்டினம், ரோதக், டில்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கோரக்பூர், காட்டாங்குளத்தூர், ஐதராபாத், ஆரிய நகர், கான்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.