சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்கள் இந்தியாவில் பெருகிவரும் வேளையில் சீனப்பொருட்களை புறக்கனிப்பது இந்தியாவுக்கு நன்மையாக முடியாது என்று சைனீஸ் அகாடமி ஆஃப் சோஷியல் சயன்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.

india_china

சீனாவின் மொத்த ஏற்றுமதியில் மிகச் சிறிய அளவையே இந்தியா இறக்குமதி செய்துகொள்கிறது. எனவே இந்தியாவின் புறக்கணிப்பு சீன பொருளாதாரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது.
மேலும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இந்தியர்கள் அன்றாடம் உபயோகிக்கும் மின்சாதன பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்களின் உதிரி பாகங்கள், இரயில் போக்குவரத்துக்குரிய பாகங்கள், கம்பியூட்டர்கள் மற்றும் டெலிபோன்கள் ஆகிய பொருட்களே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனாவிலிருந்து இப்பொருட்களின் வரத்து நின்று போனால் பாதிக்கப்படப்போவது இந்தியர்களின் அன்றாட வாழ்வுதான்.
பொருளாதாரரீதியாக, இந்தியா சீனாவுடன் அமநிலையற்ற பொருளாதார உறவுகளையே கொண்டிருக்கிறது, ஏற்றுமதியைவிட இறக்குமதி விகிதம் அதிகரித்திருப்பது புதுடெல்லியை எரிச்சலடைய செய்திருக்கிறது. இந்தியாவின் இவ்வணிகப் பற்றாக்குறை விகிதம் கடந்த 2015 ஆம் ஆண்டில் 51.45 பில்லியன் டாலராக இருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் தீர்க்கப்படாத பிரச்ச்னைகள் இருநாடுகளின் நம்பிக்கையை பாதிப்பதோடு வணிகத்தையும் பாதிக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.